கோண புளியங்கா - கொடுக்காப்புளி - jungle jalebi


We purchased this கோண புளியங்கா - கொடுக்காப்புளி - jungle jalebi for Rs 40 weighing 0.25 kg

Refer: http://en.wikipedia.org/wiki/Pithecellobium_dulce

Sparrow on cable


These sparrows were found sitting on cable connection wires.



நீரைப் பருக வேண்டும்

Photo: +Arun Tamilan 

படத்திலே உச்சி வெயில் மண்டையைப் பிளக்கின்றது.இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து மீள நாம் அதிகளவு நீரைப் பருக வேண்டும்.ஒரு சராசரி மனிதன் ஒருநாளைக்கு குறைந்தது 2 லீட்டர் தண்ணீரையாவது குடிக்க வேண்டும்.நமது சிறார்களின் உணவிலே பழங்களும் காய்கறிகளும் அதிகளவு சேர வேண்டும்! இனிப்புப் பண்டங்கள் அவர்களது உணவிலே நன்கு குறைக்கப் பட்டு அவர்களின் ஆர்வம் விளையாட்டிலும் உடல்ப் பயிட்சியிலும் தீவிரமாக்கப் படவேண்டும்.சிறார்கள் சரியான  உணவுப் பழக்கத்தின் மூலம் ஆரோக்கியத்தைப் பெற்று விட்டால் அவர்கள் இத்தகைய விளையாட்டு இடங்களிலே ஓடி ஆடி விளையாடுவதே அவர்களுக்கு சிறந்த ஒரு உடல் பயிற்ச்சி தானே !
  நல்ல உணவுப் பழக்கம்,சுத்தம் சுகாதாரத்துடன் சேர்ந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உடல்ப்பயிட்சி,நல்ல புத்தகங்களை நோக்கிய வாசிப்புப் பழக்கம் போன்றவற்றை நாம் நமது சிறார்களுக்கு கற்றுத்தர வேண்டும்.அவர்கள் மனதிலே மகிழ்ச்சி பொங்கவேண்டும்!படத்திலே இந்தச் சிறுவன் வைத்திருக்கும் பல்லூன்களைப் போல நமது மனங்கள் யாவும் விரிந்து பரந்ததாகட்டும்!அற்புதமான சிந்தனைகள் நம்மவர்களிடையே உதிக்கட்டும்! இந்த உலகினை எல்லாவிதத்திலும்  நாம் ஒளியூட்டுவோம்!

- By Anjana

கோடை காலம்

Photo: +Arun Tamilan 

வணக்கம் நண்பர்களே!
உங்களை இந்த வலைப் பதிவினூடாக சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்தப் படம் என்மனதில் உருவாக்கிய உணர்வலைகளை நான் இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகின்றேன்.

கோடை காலம் எப்போதுமே மனதிற்கு மிகவும் இனிமையானது.மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குவது ஒரு வித இன்பம் என்றால் அப்படிப் பட்ட மரங்களுடன் சேர்ந்த சோலைகளில் நம் சிறார்கள் துள்ளிக் குதித்து மகிழ்ந்து விளையாடுவதைப் பார்ப்பது இன்னொரு வித இன்பம்!
          இப்படியான இன்பங்களையெல்லாம் பெற நாம் முதலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.நமது சிறார்களை உடலால் மட்டும் அல்ல, உள்ளத்தினாலும் ஆரோக்கியமானவர்களாக மாற்றவேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது.ஒரு ஆரோக்கியமான மனிதன், ஆரோக்கியமான ஒரு நல்ல குடும்பத்தையும், ஆரோக்கியமான பல குடும்பங்கள், நல்ல ஒரு சமுதாயத்தினையும், அப்படிப் பட்ட நல்ல பல சமுதாயங்களின் சேர்க்கை,  நல்ல ஒரு உலகத்தின் தோற்றத்திற்கும் வழிவகுக்கின்றது.

- By Anjana


sweet corn இனிப்பு சோளம் sweet potato சர்க்கரை வள்ளி கிழங்கு


sweet corn இனிப்பு சோளம் sweet potato சர்க்கரை வள்ளி கிழங்கு were cooked in cooker and ready to be eaten as snacks.